உலகம்

மோடியின் நட்பை ஒபாமா மிகவும் மதிக்கிறார்: வெள்ளை மாளிகை தகவல்

பிடிஐ

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பையும், உறவையும் அதிபர் ஒபாமா மிகவும் மதிக்கிறார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இரு தினங்களுக்கு முன்பு ஒபாமாவை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால் இந்தியா கேட்டுக் கொள்ளாத நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என்று ஒபாமா திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான உறவை ஒபாமா மிகவும் மதிப்பதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையின் ஊடகத் துறை துணை செயலாளர் எரிக் சுல்ட்ஸ் நேற்று செய்தியாளர்க ளிடம் இது தொடர்பாக கூறியது:

அமெரிக்காவும், இந்தியாவும் இப்போது மிகவும் நெருக்கமான நட்புறவுடன் செயல்படுகின்றன. முக்கியமாக பிரதமர் மோடியுடனான உறவை அதிபர் ஒபாமா மிகவும் மதிக்கிறார். மேலும் பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே இந்தியா வுடனான உறவை மிகச்சிறப்பான தாக்க வேண்டியவற்றை செய்யு மாறு அதிகாரிகளிடமும் ஒபாமா கூறியுள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT