பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்ததில் அதில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் சர்யாப் சாலையில் உள்ள பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்படத் தயாராக இருந்த நிலையில் குண்டு வெடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் தினக் கூலி தொழிலாளர்கள் என்றும் காய மடைந்தவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாகாண காவல் துறை தலைவர் அல்மிஷ் கான் செய்தியாளர்களிடம் கூறும் போது, “வழக்கமாக தினமும் இரவில் கடைசியாக புறப்படும் பேருந்தில் குண்டு வெடித் துள்ளது. அந்தபஸ்ஸின் மேற் கூரை மீது ஒரு பையில் டைமர் கருவி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு மாகாண முதல்வர் டாக்டர் மாலிக் பலோச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.