உலகம்

"பெடல்" செய்தால் மின்சாரம் தரும் பைக்: தாய்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர் முடிவு

பிடிஐ

பெடல் செய்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நவீன பைக்கை இந்திய கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர் மனோஜ் பார்கவா முடிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டில் மொத்தம் 10 ஆயிரம் மின் உற்பத்தி பைக்குகளை கிராம மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஓட்டிச் செல்ல முடியாது. அதில் இருக்கும் பெடலை பயன்படுத்தி கருவியை சுழலச் செய்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். அதனை பேட்டரிகளில் சேமித்து வீட்டு உபயோகத்துக்காக பயன் படுத்தலாம்.

“ஒரு மணி நேரம் பெடல் செய்வதன் மூலம் ஒரு வீட்டில் ஒருநாளுக்கான மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். விளக்கு களையும், வீட்டில் சாதாரண மாக பயன்படுத்தும் மின் சாதனங் களையும் தங்கு தடையின்றி இயக்க முடியும்” என்று பார்கவா கூறியுள்ளார்.

முதல்கட்டமாக உத்தராகண்ட் மாநில கிராமங்களில் 15 முதல் 20 மின் உற்பத்தி பைக்குகளை சோதனை முறையில் பயன்படுத்தி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 ஆயிரம் மின் உற்பத்தி பைக்குகள் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப் படும்.

இதன் மூலம் மின்சார வசதி முறையாக கிடைக்காமல் அவதிப் படும் கிராம மக்கள் பயனடை வார்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் மனோஜ் பார்கவா வசித்து வருகிறார். அவரது குடும் பத்தினர் 1967-ம் ஆண்டு இந்தியா வில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இப்போது 62 வயதாகும் பார்கவா இதற்கு முன்பு “பைவ் ஹவர் எனர்ஜி டிரிங்” தயாரித்ததன் மூலம் அமெரிக் காவில் பிரபலமானார். அமெரிக்கா வாழ் இந்திய கோடீஸ்வரர்களில் குறிப்பிடத்தக்கவர்.

SCROLL FOR NEXT