உலகம்

ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து தொற்று பரவுவதைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து கரோனா தொற்றை பரவுவதைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளால் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து தனது இறுதிக்கட்ட சோதனையை நெருங்கி உள்ள நிலையில் ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து கரோனா தொற்றை பரவுவதைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட தகவலில், “ ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனையில் வாரம் வாரம் 6,000 பேர் ஈடுபட்டனர். இந்த தடுப்பு மருந்து கரோனா வைரஸ் பரவுதை தடுக்கும் திறனை அதிக அளவில் கொண்டுள்ளது இறுதிக் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 90% வைரஸ் பரவுவதை தடுக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா தடுப்பு மருந்து வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இன்னும் சில தூரம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT