சீனாவின் தெற்கில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதி வீசிய கடும் சூறாவளிக்கு 19 பேர் இறந்தனர். கனத்த மழையுடன் 111 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் இம்மாகாணத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதில் சுவர், கூரை இடிந்து விழுந்தது, நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பால் படகுகள் மோதிக் கொண்டது என பல்வேறு சம்பவங்களில் 19 பேர் இறந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்களை காணவில்லை.
முஜிகே என்று பெயரிடப்பட் டுள்ள இந்த சூறாவளி இந்த ஆண்டின் 22-வது சூறாவளியாகும். இந்த சூறாவளிக்கு குவாங்டாங் மாகாணத்தில் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 174,400 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
அருகில் உள்ள குவாங்ஸி மாகாணத்தில் சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மரம் வேருடன் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 417 வீடுகள் சேதம் அடைந்தன.