உலகம்

நினைவில் கொள்ள வேண்டிய ஆட்டம்: நடராஜன் ட்வீட்

செய்திப்பிரிவு

நினைவில் கொள்ளவேண்டிய ஆட்டம் என்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 20-20 போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் பதிவிட்டுள்ளார்.

நடராஜன், சாஹலின் அருமையான பந்துவீச்சு, கே.எல்.ராகுல், ஜடேஜாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கான்பெரேராவில் இன்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

டி20 அணியில் முதன்முதலில் இடம் பெற்ற யார்க்கர் மன்னன் தமிழக வீரர் டி.நடராஜன், 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில் சிறப்பாக விளையாடியது குறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்” நினைவில் கொள்ள வேண்டிய ஆட்டம் ,முன்னும், பின்னும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடராஜன் பதிவுக்கு கீழே ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT