மவுன்டன் டியூ, பான்டா, பவரேட் உள்ளிட்ட மென்பானங்களில் சர்ச்சைக்குரிய நறுமண சமையல் எண்ணெய் சேர்ப்பது நிறுத்தப்படும் என கோக கோலா, பெப்சிகோ நிறுவனங்கள் அறிவித்தன.
மென்பானங்களில் சேர்க்கப்படும் நறுமண சமையல் எண்ணெய் (புரோமினேடட் வெஜிடபிள் ஆயில்), சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மிசிசிபியைச்சேர்ந்த ஒருவர் பெப்சிகோவின் கடோரேட் மற்றும் கோக கோலாவின் பவரேட் ஆகியவற்றில் இந்த எண்ணெயை சேர்க்கக்கூடாது என தெரிவித்து புகார் அனுப்பியுள்ளார்.
இந்த நறுமண சமையல் எண்ணெய் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் பொருளாக காப்புரிமை பெறப்பட் டுள்ளதாகும். இந்த எண்ணெயை பயன்படுத்த ஐரோப்பிய யூனியனும் ஜப்பானும் அங்கீகாரம் தரவில்லை என தனது புகார் மனுவில் சாரா கவனாக் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த எண்ணெயால் உடல்நலத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என கோக கோலாவும் பெப்சிகோவும் தெரிவித்துள்ளன. பழ வாசனை கொண்ட இந்த மென்பானங்களில் நறுமணம் சீராக பரவியிருக்க உதவிடவே இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றன.
இருப்பினும், மென்பானம் தயாரிக்க பயன்படும் பொருள்கள் பற்றிய விவரத்தின் மீது பொதுமக்கள் அதிக கவனம் செலுத் துவதால் தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதலை பிரதி பலிப்பதாகவே இந்த நிறுவனங்கள் இந்த எண்ணெய் விவகாரத்தில் எடுத் துள்ள முடிவு நிரூபிக்கிறது. தாம் தயாரிக்கும் உணவுப் பொருள்களில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள், சாயங்களுக்கு நுகர்வோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய நிறுவனங்கள் தயாரிப் பில் உதவும் பொருள்கள் பலவற் றை மாற்றியுள்ளன.
போட்டிக்கு ஈடுகொடுப்பதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவை என்ற கருத்தை மக்கள் மத்தியில் பதியவைக்கும் நோக்கிலும் தமது விற்பனை தந்திரங்களை உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் மாற்றிக்கொண்டுள்ளன.