உலகம்

நேபாளத்தின் முதல் பெண் அதிபர் வித்யா தேவி பண்டாரி

பிடிஐ

நேபாள அதிபர் தேர்தலில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண்டாரி வெற்றி பெற் றுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குல் பகதூர் குருங்கை விட 113 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றி பெற் றார். வித்யா தேவி பண்டாரி 327 வாக்குகளும், குல் பகதூர் குருங் 214 வாக்குகளும் பெற்றார்.

நேபாள பிரதமர் கட்ஜா பிரசாத் ஓலி தலைவராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரான செல்வி. பண்டாரி (54) கூட்டணி அரசின் தலைவராக இம்மாத ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபிறகு நேபாளத்திற்கு ஒரு புதிய அதிபர் தேவையின் அடிப்படையில் இத்தேர்தல் நடத்தப்பட்டது.

நேபாளத்தில் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வித்யா தேவி புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களின் உரிமை நிலைநாட்டிட அரசியல்வாதிகள் மத்தியிலும் பிரச்சாரம் செய்துவந்தார்.

அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றத்தில உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருநதால் நாட்டின் அதிபராகவோ துணை அதிபராகவோ ஒரு பெண் இருக்கவேண்டும்.

நேபாளத்தின் புதிய அதிபரின் கணவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின்(யுஎம்எல்) தலைவராக இருந்த மதன் பண்டாரி 1993ல் ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக உருவெடுத்தார். மதன் பண்டாரியின் கொலைவழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அதிபர் வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் மன்னர் ஞானேந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தார். அவரது பெருமுயற்சியால் மன்னரின் சர்வாதிகார ஆட்சி 2008ல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்தது.

நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகு வித்யா தேவி நேபாளத்தின் இரண்டாவது பெண் அதிபராகியுள்ளார்.

SCROLL FOR NEXT