ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. விக்டோரியா நகரில் 28-வது நாளாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து விக்டோரியா மாகாண அரசு தரப்பில், “ ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான விக்டோரியாவில் 28 நாளாக கரோனா உறுதி செய்யப்படவில்லை. கரோனா தொற்று இங்கு நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் 27,874 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,384 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.