கரோனா தொற்று காரணமாக சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
இதுகுறித்து சாதில் அல் மஹ்தி குடும்பம் தரப்பில், “கரோனாவால் பாதிக்கப்பட்ட சாதிக் அல் மஹ்தி மூன்று வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமர் சாதிக் அல் மஹ்தி ஆவார். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சூடனில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
சாதிக் அல் மஹ்தியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும் என்று சூடான் அரசு தெரிவித்துள்ளது.