ஜோர்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அதன் தலைநகர் அம்மானில் ஒரு தெருவுக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.
சத்ஸாக்லவுல் என்ற சாலையின் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மான் மேயர் அகெல் பெல் டாகி கூறும் போது, “இந்தப்பாதை அமைதிக் கான போராட்டத்துடன் தொடர் புடையது என்பதால் இந்தியத் தலைவரின் பெயரை வைக்க முடிவு செய்தோம். மறைந்த அரசர் முதலாம் அப்துல்லா அமைதி வழி யில் போராடி மன்னராட்சியி லிருந்து 1946-ல் விடுதலை பெற்றுத் தந்தார். எனவே, காந்தியை எங்கள் இதயத்துடன் மட்டுமல்ல, உலகில் அமைதிக்கான அனைத்துப் போராட்டத்துடனும் அடையாளப்படுத்த விரும்பி னோம்” என்றார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறும்போது, “இந்த தெருவுக்கு வேறு பெயர் சூட்டப்படும்போது, அது சுதந்திரப்போராட்ட வரலாற்றைத் தொடர்புபடுத்துவது மட்டுமல்ல, இந்நகரம் நாகரிகத்தின் தொட்டில் என்ற வகையில், மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது” என்றார்.
பிரணாப் முகர்ஜி, அங்குள்ள அமைதிப்பூங்காவில் ஓர் ஆலிவ் மரக்கன்றையும் நட்டார்.