மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,187 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,187 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,41,875 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் 303 பேர் கரோனாவுக்குப் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,01,676 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பலவகையான தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில், பல நாடுகளும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.