பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு பிலிப்பின்ஸின் இசபெல்லா நகரில் துணை மேயர் அப்துல்பாகி அஜ்போன் வாகனத் தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப் பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்த னர். 6 பேர் படுகாயமடைந்தனர். அதிருஷ்டவசமாக துணை மேயர் அஜ்போன் காயமின்றி தப்பினார்.
துணை மேயர் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களும், அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கதவுகளும் மோசமாக சேதமடைந்தன. இச பெல்லா நகர மேயர் சேர்ரிலின் சான்டோஸ் அக்பரின் வீட்டுக்கு எதிரே இந்த சம்பவம் நிகழ்ந்துள் ளது. எனவே இந்த வெடிகுண்டு தாக்குதல் இலக்கு யாருக்கு என்பது சரியாக தெரியவில்லை. மேயரை சந்திப்பதற்காகவே துணை மேயர் அங்கு வந்தார்.
பிலிப்பின்ஸில் அபு சயாப் தீவிர வாத அமைப்பினர்தான் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங் களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக் கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.