உலகம்

ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம்: ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் கருத்து

டி.ராமகிருஷ்ணன்

ஊடக நிறுவனங்கள் அனைத் தும் நடத்தை நெறிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம் என்று ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய ஊடக குழுமமான லேக் ஹவுஸ் குரூப்பின் நிறுவன முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விழா கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. இதில்

‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் பங்கேற்று பேசிய தாவது:

பொருளாதார ரீதியாக நிலைத்திருப்பதும், அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப் பதும்தான் இப்போது இந்திய ஊடக நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள். ஊடக நிறுவன உரிமையாளர்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் செய்திகளையும், கட்டுரைகளை யும், விமர்சனங்களை திரித்துக் கூறும்போக்கு, ஊடகத்துறை வர்த்தக மயமாகி வருவது, பத்திரிகைகளுக்குள் காணப்படும் தீவிர விலைக்குறைப்பு போட்டி போன்ற எதிர்மறை போக்கு பெருகி வருகிறது. இது தவிர தமது பிரதான வர்த்தக நோக்கத்தை வேறு ஒன்றாக கொண்டு இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்தி ஊடகத் துறையை தமது கிளையாக வைத்துக்கொண்டு செயல்படும்போது மேற்குறிப் பிட்ட எதிர்மறை போக்குகள் இன்னும் வலுவடையும்.

ஊடக நிறுவனங்கள் நடத்தை நெறிமுறைகளை நிர்ணயித்துக் கொண்டு அந்த வரம்புக்குள் பத்திரிகையாளர்களும் ஊடகத் தொழில் நிறுவனங்களும் இயங்க வேண்டும். மேலும் ஊடக நிறுவனங்களுக்குள் கட்டுப் பாடுடன் செயல்படுவதற்கான நடைமுறை ஏற்பாடும் அவசியம் இவ்வாறு அவர் பேசினார்.

மீடியா டெவலப்மென்ட் பவுன்டேஷன் சென்னையில் நடத்தும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிஸம் கல்வி நிறுவனத்தில் 2016-17ம் ஆண்டில் இலங்கை மாணவர் படிப்பதற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் என்.ராம் அறிவித்தார்.

SCROLL FOR NEXT