உலகம்

மெக்சிகோவில் கரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிறது

செய்திப்பிரிவு

மெக்சிகோவில் கரோனா வைரஸினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “மெக்சிகோவில் இதுவரை கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,03,253 ஆக உள்ளது. கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. 98,259 பேர் பலியாகி உள்ளனர். கரோனாவில் அதிகம் உயிர் பலி ஏற்பட்ட நாடுகளில் மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரோனா பாதிப்பில் 11வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.

கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில் , இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

SCROLL FOR NEXT