உலகம்

இந்திய உதவியில் கட்டப்படும் வீடுகளை ஒதுக்க தமிழ் பெண்களுக்கு பாலியல் நிர்பந்தம்: இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மீது புகார்

பிடிஐ

இலங்கையில் போரினால் பாதிக் கப்பட்ட தமிழர் பகுதிகளில் இந்திய அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக் கப்படுகின்றன. இந்த வீடுகளை ஒதுக்க செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் தமிழ் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அங்கு போரினால் பாதிக் கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளில் இந்திய அரசு சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின் றன. கடந்த 2012-ம் ஆண்டில் தொடங் கப்பட்ட இத்திட்டம் இலங்கை செஞ் சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வை யில் நடைபெற்று வருகிறது.

அதன்படி கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் 1800 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த 16 திட்ட அதிகாரிகள் மேற்பார்வைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க தமிழ் பெண் களை செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி கள் பாலியல்ரீதியாக துன்புறுத்துவ தாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கணவரை இழந்த பெண் ஒருவர் அண்மையில் துணிச்சலாக புகார் அளித்தார். அவரைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளை செயலர் தம்பு சேதுபதி கூறியதாவது: சுமார் 30 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர், அவற்றில் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட 15 புகார்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புகாரை தொடர்ந்து சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் இன்னும் ஏராள மான பெண்கள் பாதிக்கப்பட் டிருக்கலாம் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியா எச்சரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தூதரகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து இந்திய தூதரக மூத்த அதிகாரி கொழும்பு ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இத்தகைய அவலத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று எச்சரித்துள்ளார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மூத்த நிர்வாகி மகேஷ் ஜோன்னி கூறியபோது, பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, யாராவது தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT