உலகம்

இந்திய வம்சாவளி டாக்டருக்கு அமெரிக்க விருது

செய்திப்பிரிவு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மிதுல் கதாகியாவுக்கு அமெரிக்காவின் சிறந்த இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருக்கான கிரிகோரி பிராடின் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

இருதய மருத்துவ ஆய்வில் பங்களிப்பு, இருதய சிகிச்சைகளை திறமையாக மேற்கொள்வது, மருத்துவ இதழ்களில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகள், நோயாளிகளிடம் காட்டும் பரிவு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்குரிய டாக்டர் தேர்வு செய்யப்படுகிறார்.

கதாகியா இப்போது பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்த அவர், பின்பு ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார். இருதய அறுவை சிகிச்சையில் பல்வேறு புதிய முறைகளை கதாகியா வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார்.

SCROLL FOR NEXT