உலகம்

பாகிஸ்தானில் இருந்து இன்று நாடு திரும்புகிறார் கீதா

ஏஎஃப்பி

பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா (23) இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறிய கீதா பாகிஸ் தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அவரை போலீஸார் மீட்டு கராச்சி யில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர்.

காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற் போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை கண்டுபிடிக்க எதி அறக்கட்டளை பல்வேறு முயற்சிகளை செய்தும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பஜ்ரங்கி பைஜான்’ என்ற ஹிந்தி திரைப் படம் கடந்த ஆகஸ்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாகிஸ் தானில் இருந்து இந்தியாவுக்குள் வழிதவறி வந்த வாய் பேச முடியாத சிறுமியை சல்மான் கான் மீட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதை மையமாக வைத்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் தவிக்கும் கீதாவின் கதையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப் பட்டதாக இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கீதா விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உத்தரவுபடி பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ராகவன், இளம் பெண் கீதாவை சந்தித்துப் பேசி னார். அதைத் தொடர்ந்து எடுக்கப் பட்ட முயற்சியின்பேரில் கீதாவின் பெற்றோர் பிஹாரில் இருப்பது கண்டறியப்பட்டது.

இருநாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகு சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கீதா இன்று நாடு திரும்பு கிறார். விமானத்தில் டெல்லி வரும் அவர் அங்கிருந்து பிஹாருக்குச் செல்கிறார்.

அவருடன் எதி அறக்கட்டளை யைச் சேர்ந்த சபா எகியும் உடன் வருகிறார். அவர் கூறியபோது, கீதாவை பிரிவதில் எங்களுக்கு வருத்தம்தான், ஆனால் அவர் தனது பெற்றோர், சொந்த மக்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT