உலகம்

பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் சட்ட விரோதமாக வாக்குகள் பதிவு: ட்ரம்ப் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் சட்ட விரோதமாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு சுமார் 10,000 வாக்குகள் சட்ட விரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தேர்தல் நாளன்று பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் முடிவுகளை எளிதாக மாற்றி இருக்கக் கூடும். சட்டவிரோதமான வாக்குகள் கவனிக்கப்படவில்லை” என்று ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 59-வது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிட்டனர்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்ட ரீதியாகத் தான எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT