உலகம்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்: ட்ரம்ப் ட்வீட்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போதிய இடங்களை ஜனநாயகக் கட்சி நெருங்கி வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்க தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளுடன் தேங்கியுள்ளார். விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களிலும் ஜோ பைடன் வென்றுள்ளார். இன்னும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகவில்லை.

நியூயார்க் , அரிசோனா ஆகிய மாகாணங்களில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், “ வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு கீழே ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

SCROLL FOR NEXT