மாற்றுப் பாலினரின் உடைகளை இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த திருநங்கைகள் அணிவதற்கு விதித்த தடையை உறுதி செய்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த திருநங்கைகள் மாற்றுப் பாலினத்தவரின் உடைகளை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கை மலேசிய நீதிமன்றம் ரத்து செய்தது. உடை அணிவதில் கட்டுப்பாடு விதிப்பது அரசியலமைப்புக்கு தகாத செயல் என்று அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை எதிர்த்து மலேசிய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது திருநங்கைகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரவுஸ் ஷெரிஃப், ஆடைக் கட்டுப்பாடு நீக்கப்படுவது சமூகத்தில் நடைமுறைக்கு இணக்கமற்ற சூழலை ஏற்படுத்திவிடும் என்றார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புக்கு திருநங்கைகள் ஆதரவு அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து திலகா சுலாதிரே என்ற திருநங்கைகள் ஆதரவாளர் கூறும்போது, "இந்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான். ஆகவே இதனை ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொண்டோம்." என்றார்.