உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் வெற்றியை நெருங்கும் ட்ரம்ப்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றியை நோக்கி நெருங்குவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவில் இதுவரை 98% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் 51.28 % வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார். 47.82% வாக்குகளை ஜோ பைடன் பெற்று இருக்கிறார் என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புளோரிடாவைப் பொறுத்தவரை கடந்த ஐந்து அமெரிக்கத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியினர் 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சியினர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் குடியரசுக் கட்சியே புளோரிடா மாகாணத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவரே அதிபராக ஆக முடியும். ஃபாக்ஸ் செய்தி நிறுவனம், 538 தேர்தல் சபை வாக்குகளில் பைடன் 207, ட்ரம்ப் 148 வாக்குகள் பெற்றதாகக் கூறுகிறது. மாறாக சிஎன்என் தொலைக்காட்சி, 192 தேர்தல் சபை வாக்குகளைப் பைடன் பெற்றார் என்றும், ட்ரம்ப் 108 வாக்குகள் பெற்றார் என்றும் கூறுகிறது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, பைடன் 133 தேர்தல் சபை வாக்குகளையும், ட்ரம்ப் 115 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT