இந்திய அமெரிக்க பெண்ணான பிரமீளா ஜெயபால் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ச்சியாக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த பிரமீள ஜெயபால் (55) ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், இவர் குடியரசுக் கட்சியின் கிரெய்க் கெல்லர் என்பவரை பெரிய அளவில் 70% புள்ளிகளில் வெற்றி பெற்றார். வாஷிங்டன் மாநில 7வது காங்கிரஸ் மாவட்டத்தில் இவர் வெற்றி பெற்றார்.
இதுவரை 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரமீள ஜெயபால் 344,541 வாக்குகல் பெற்றுள்ளார், குடியரசுக் கட்சி வேட்பாளர் 61,940 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
பிரமீளா ஜெயபால் இந்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கைகலை கடுமையாக எதிர்ப்பவர். இவர் சிஏஏவையும் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இவர் 2016-ல் முதல் முரையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண் ஆவார்,.
இவரைப்போலவே இல்லினாய் தொகுதியில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கலிபோர்னிஅயவிலும் டாக்டர் ஆமி பேரா, ரோ கன்னா ஆகிய இந்தியர்கள் பிரதிநிதிகள் சபைக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றனர்.