உலகம்

பென்சில்வேனியாவில் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம்: ஜோ பைடன்

செய்திப்பிரிவு

பென்சில்வேனியாவில் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்று ஜன நாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிட்ஸ்பர்க்கில் திங்கள் கிழமை நடந்த பேரணியில் ஜோ பைடன் பேசும் போதும் , “ நாளை பென்சில்வேனியாவில் நாம் பெறவுள்ள வெற்றிக்காக ஒன்றாக கூடுவோம். பென்சில்வேனியா மக்களே சக்தி உங்கள் கையில் உள்ளது. நாம் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம்.” என்றார்.

ஜோ பைடனின் பேச்சை கேட்டு அங்கிருந்த மக்கள் கைகளை தட்டி ஆதரவளித்தனர்.

முன்னதாக முக்கிய மாகாணங்களான புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அமெரிக்க தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க உள்ளனர். பதிவான ஓட்டுகள் புதன்கிழமை முதல் எண்ணப்படுகிறது என்றும் தேர்தல் முடிவு வியாழக்கிழமை வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜோ பைடனே முன்னிலையில் இருந்து வருகிறார்.

ட்ரம்ப்பின் தேசியவாதம் மற்றும் கரோனா தொற்று அவருக்கு இந்த தேர்தலில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது அதுவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பிரதிப்பலித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT