உலகம்

காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு பரோல்

ராய்ட்டர்ஸ்

காதலி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்கு பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலை ஆன நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால தண்டனையை சீர்திருத்த கண்காணிப்பில் வீட்டு சிறையில் அனுபவிக்கும்படியாக தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது.

பிஸ்டோரியஸ் அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொன்றதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என்று நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே காதலியை தவறுதலாக சுட்டுவிட்டதாக பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதனால், காதலியை கொலை செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை என்ற வாதத்தை ஏற்று, அவருக்கு நீதிமன்றம் திட்டமிடாத கொலைக்கான தண்டனையை அளித்திருந்தது.

ஆனால், அவர் குற்றநோக்கத்துடனேயே தான் இந்த கொலையை செய்தார் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT