உலகம்

பாலஸ்தீனம் சென்றார் பிரணாப்

பிடிஐ

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒருநாள் பயணமாக பாலஸ்தீனம் சென்றார். ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளில் 6 நாட்கள் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக கடந்த 10-ம் தேதி அவர் டெல்லியில் இருந்து ஜோர்டானுக்கு சென்றார்.

தனது ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று பாலஸ்தீனம் சென்றார். ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானத்தில் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்குச் சென்றார்.

முன்னதாக ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு சொந்த மானது, பிரான்ஸ் பிரெஞ்சுகாரர் களுக்கு சொந்தமானது, அதே போல பாலஸ்தீனமும் அரேபியர் களுக்கே சொந்தம் என்று தெரிவித் தார். பாலஸ்தீனத்தில் அதன் அதிபர் அப்பாஸ், பிரதமர் ரமி ஹமாதுல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரணாப் சந்தித்துப் பேசுகிறார்.

அங்குள்ள அல் குவாத் பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர் லால் நேரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பேசினார். பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் இஸ்ரேல் செல் கிறார். அங்கு 3 நாட்கள் தங்கியி ருக்கிறார்.

பிரணாபின் பயணத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங் களில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT