உலகம்

இயற்கைக்கு எதிரான மனித செயல்கள் தொற்று நோய்களை உருவாக்கும்: ஐ.நா. எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள் வருங்காலத்தில் பல தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கரோனா வைரஸ் போன்று 8,50,000 வைரஸ்கள் உள்ளன. அவை விலங்குகளிடம் உள்ளன. அவை மனிதர்களை தாக்கக் கூடும். இயற்கைக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகள் வருங்காலத்தில் பல தொற்று நோய்களை உண்டாக்க வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT