உலகம்

சூறாவளியை கண்டறியும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது சீனா

செய்திப்பிரிவு

சூறாவளியை மிகத் துல்லியமாக கண்டறியும் உதவும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.

அந்நாட்டின் தென்பகுதியை நேற்று மிஜிகா சூறாவளி தாக்கி யது. அப்போது இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அதில் இருந்து ரேடி யோசோன்ட் எனப்படும் வானி லையை கண்காணிக்கும் கருவிகள் வானில் விடப்பட்டன.

இவை சூறாவளியை மிகத்துல்லியமாக கணித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பின. அதன் அடிப்படையில் உரிய முன் னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீனா இப்போது முதல் முறையாக சூறாவளியை ராக்கெட் மூலம் கண்காணிக்கும் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக பரி சோதித்துள்ளது. சீனாவில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT