உலகம்

நான் சரணடையவில்லை... இந்தியா திரும்பவே விரும்பினேன்: சோட்டா ராஜன்

பிடிஐ

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் (55), இந்தியாவுக்கு திரும்ப விரும்புவ தாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1970-களில் மும்பை செம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிழல்உலக தாதாவாக சோட்டா ராஜன் வலம் வந்தார். அவரின் நிஜப்பெயர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி.

நிழல்உலகில் கால் பதித்தது முதல் தாவூத் இப்ராஹிமின் வலது கரமாக செயல்பட்ட அவர் மீது கொலை, கடத்தல், பணம் பறிப்பு, போதை மருந்து கடத்தல் என 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தாவூத்தின் சதியால் கடந்த 1993-ம் ஆண்டில் மும்பையில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தைக் கண்டித்து தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் நிரந்தரமாகப் பிரிந்தார். அதன்பிறகு 1995-ல் அவர் இந்தியா வில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி னார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அண்மைகாலமாக மோகன் குமார் என்ற பெயரில் அவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசி யாவின் பாலி தீவுக்கு வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சரணடையவில்லை

மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு தாவூத்துக்கும் சோட்டா ராஜனுக்கும் இடையே பகைமை நீடிக்கிறது. சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத்தின் ஆட்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் பாங் காங்கில் ஹோட்டல் ஒன்றில் தங்கி யிருந்த ராஜனை கொல்ல தாவூத் ஆட்கள் முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தானா கவே அவர் இந்திய உளவுத் துறையை தொடர்பு கொண்டு இந்தோனேசியாவில் இன்டர் போல் போலீஸாரிடம் சரண் அடைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜிம்பாப்வே நாட்டில் சோட்டாராஜன் பல்வேறு தொழில்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு செல்ல விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக அவர் பாலியில் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்டர்போல் போலீஸிடம் நான் சரண் அடையவில்லை. விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக போலீஸார் கைது செய்தனர். இப் போதைக்கு நான் ஜிம்பாப்வே செல்ல விரும்பவில்லை. இந்தியா வுக்கு திரும்புவதையே விரும்பு கிறேன். தாவூத் உட்பட யாரைக் கண்டும் அஞ்சவில்லை. எனது உயிருக்கு அஞ்சி இந்திய உளவு அமைப்புகளுடன் எந்த பேரமும் செய்து கொள்ளவில்லை.

இந்தோனேசியாவில் எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. கைகளுக்கு விலங்கிடுகின்றனர். எனவே விரைவில் இந்தியா திரும்ப விரும்புகிறேன். இப்போதைக்கு சிபிஐ அதிகாரிகளுக்காக காத்திருக் கிறேன். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

6 மணி நேரம் விசாரணை

இதனிடையே சோட்டா ராஜனி டம் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக பாலி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள் ளன. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிபிஐ சிறப்புக் குழு பாலியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் தாவூத் உள்ளிட்ட எதிரி குழுக்கள் மூலமாக சோட்டா ராஜனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து சிபிஐ ரகசியம் காத்து வருகிறது.

SCROLL FOR NEXT