பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் புதன் அன்று பாலஸ்தீனர்களுக்கு உலகப் பாதுகாப்பு கோரியுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளால் மனித உரிமை மீறப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேலிய பிதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பாலஸ்தீனர்கள் மீது இனப்படுகொலை புரிந்துவருவதாகவும் அப்பாஸ் குற்றஞ்சாட்யுள்ளார்.
ஐ.நா. சபை சார்பாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் கவுன்சிலில் தனது கோபம் கொப்பளிக்கும் பேச்சின் ஊடே அப்பாஸ் இதைத் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தில் அமைதியைக்கொண்டுவர வேண்டிய முயற்சிகளை ஐ.நா. உடனடியாக மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பேச்சுவார்த்தையில் மட்டுமே நேரத்தை வீணடிப்பதில் எந்தப் பயனும் இல்லை. சர்வதேச சட்டமுறைமைக்கு ஏற்ப ஆக்கிரமிப்பை முடிவுக்குக்கொண்டுவர என்ன செய்யவேண்டுமோ அதை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு கொலைகளை இஸ்ரேல் நடத்திவருவதாக அப்பாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்திய வன்முறையின்போது துப்பாக்கியால் பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிக்கூடங்களில் அரபுமொழி கட்டாயம்
ஆறுவயதிலிருந்து மாணவர்கள் கட்டாயமாக அரபு மொழி பயில வேண்டுமென்பதை ஆதரித்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன் அன்று வாக்களித்தனர். இஸ்ரேலிய யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த இது வழிவகுக்கும் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.