உலகம்

ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்: ஜூனியர் ட்ரம்ப்

செய்திப்பிரிவு

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர். அவர் சீனாவுக்குச் சாதகமானவர் என்று ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆதரவாளர்களிடம் ஜூனியர் ட்ரம்ப் கூறும்போது, “ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர். அவர் சீனாவுடன் நட்புடன் இருக்கக் கூடியவர். நாம் சீனாவின் அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அமெரிக்க இந்தியர்களைவிட வேற யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நிச்சயம் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

SCROLL FOR NEXT