உலகம்

இந்தியாவுக்கு எதிராக தலிபான்களை தூண்டுகிறது பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ் மூலம் அம்பலம்

செய்திப்பிரிவு

கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற் றார். அப்போது அந்த நாட்டின் உளவுத் துறையான சிஐஏவின் மூத்த அதிகாரியாக இருந்த பிரெனென், அதிபர் ஒபாமாவுக்கு இ-மெயில் மூலம் ரகசிய கடிதம் அனுப்பினார். அந்த இ-மெயில் கடிதத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் இந்தியா வின் ஆதிக்கம் அதிகரிப்பதை பாகிஸ்தானால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது.

பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் தலிபான்களுக்கு அந்த நாட்டு அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெனென் தற்போது சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவராக உள்ளார்.

SCROLL FOR NEXT