டொனால்டு ட்ரம்ப் 
உலகம்

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணம் நாளை முதல் உயர்வு

செய்திப்பிரிவு

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய, ஹெச் – 1 பி விசா பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த விசாவை பெற்று, அமெரிக்காவில் உள்ள ஐ.டி. உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ஹெச் – 1 பி விசா வழங்குவதை நடப்பாண்டு இறுதி வரை நிறுத்தி வைப்பதாக அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு காணப்பட்டதால் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், ஹெச் – 1 பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை செய்து அமெரிக்க அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது. இதில், விசா கட்டணம் உயர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதன்படி, முதல் கட்டமாக தற்போது ஹெச் – 1 பி விசாவை பரிசீலிப்பதற்கான கட்டணம் நாளை முதல் 1,440 டாலரில் இருந்து 2,500 டாலராக உயர்த்தப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அறிவித்திருக்கிறது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1.5 லட்சத்தில் இருந்து 1.83 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT