உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் பலி

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்தை மையமாக வைத்து ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 ராணுவ வீரர்கள், பாதுகாப்பு வீரர்கள், பணியாளர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலை கோழைத்தனமான தாக்குதல் என்று பாகிஸ்தான் ராணுவம் விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து தங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என பலுசிஸ்தானின் பிரிவினைவாதிகள் பலரும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸ்:

பாகிஸ்தானில் 3,21,877 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,621 பேர் பலியாகி உள்ளனர். 3,05,835 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT