உலகம்

போரில் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்க கொரிய நாடுகள் முயற்சி

ஏஎஃப்பி

கொரியப் போரில் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை வட மற்றும் தென் கொரிய நாடுகளின் செஞ்சுலுவை சங்கங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

கொரியப் போருக்கு பின்னர் அந்நாட்டு மக்கள் வட மற்றும் தென் கொரியர்கள் எனப் பிரித்து அந்தந்த நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதனால் போர் முடிந்து சுமார் 60 ஆண்டுகள் ஆன நிலையிலும் லட்சக்கணக்கான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

இந்நிலையில், அவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சி முதன்முதலாக கடந்த 2000ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதேபோல், இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகளை தென்கொரிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பில் இரு கொரிய நாடுகளிலும் வசிப்பவர்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சட்டபூர்வமாக இணைய அனுமதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT