உலகம்

அதிகார துஷ்பிரயோகம்: தாய்லாந்து பிரதமரின் பதவி பறிப்பு

செய்திப்பிரிவு

தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லுக் ஷினாவத் பதவி விலக அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய பிரதமராக நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, ஷினவாத்ராவுக்கு எதிராக, தாய்லாந்து கோர்ட்டில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரதமர் பதவியை பயன்படுத்தி, மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கில் பிரதமர் மட்டுமல்லாமல், அந்த பதவி மாற்றத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக்துறை அமைச்சராக இருக்கும் நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் இடைக்காலப் பிரதமராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினால் தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாகவே அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT