உலகம்

மலேசியாவில் கட்டுப்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

மலேசியாவில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து சில மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 660 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகினர். மலேசியாவில் கரோனா பாதிப்பு 17,540 ஆக உள்ளது. இதுவரை 167 பேர் பலியாகி உள்ளனர். 11,605 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மூன்று மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்க உள்ளது,

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் நுழைய டிசம்பர் மாதம்வரை தடை விதிக்கப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் 3. 8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT