உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 14, 231 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,231 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை 13 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

ரஷ்யாவில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. மாஸ்கோவில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தது ரஷ்யா.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT