உலகம்

ஹெச்-1பி விசா பெறுவதற்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கான கெடுபிடிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் பணி புரியும் ஊழியர்களுக்கான சம்பள விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்புப் பணிகள் என சில வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும் மூன்றாம் தரப்பு பணியிட வசதி திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தவறு செய்வோரைக் கண்டுபிடிக்கும் சிறப்புக் குழுவுக்கு மேலும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஹெச்-1பி விசா வழங்குவதற்கு முன்பும், வழங்கிய பிறகும் பணியிடங்களுக்கு அடிக்கடி சோதனை நடத்தவும் இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு புதிய ஹெச்-1பி விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர். தற்போது உள்ள மூன்றாண்டு கால வசதி இனி ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களை பணியில் அமர்த்துவது குறித்த தகவல்கள் அதிகம் அளிக்க வேண்டியிருக்கும்.மேலும் விசா பிராசஸிங் பணிகள் அதிகமாகவும் அதற்கான கட்டணமும் அதிகமாகும்.

இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹெச்-1பி விசா எண்ணிக்கை 2,78,491. தற்போது செப்டம்பர் மாதம் 2019-ல் ஓராண்டுக்கு வழங்கப்பட்ட ஹெச்-1பி விசா எண்ணிக்கை 79,423. செப்டம்பர் 2019-ல் முடிவடைந்த ஹெச்-1பி விசா பணியாளர்களின் எண்ணிக்கை 1,99,068. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவும், கனடாவைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலம் பணி புரிவோர் 5.83 லட்சமாகும். 3.50 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.

SCROLL FOR NEXT