இலங்கையில் நடைபெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதி விழாவில் மூத்த கவிஞர் துரைசிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதி யின் நூற்றாண்டுக் கொண்டாட் டங்கள் சுமார் 35 ஆண்டு களுக்கு முன்பே இலங்கை முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 30-ம் தேதி கொழும்பு தமிழ்ச் சங்கத்திலுள்ள சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பாரதி விழா நடைபெற்றது. இம் முறை ஒரு விருதும் நிறுவப் பட்டு அது மூத்த கவிஞர் த.துரை சிங்கத்துக்கு வழங்கப்பட்டது. அதனை மூத்த இலக்கியவாதி செ.கணேசலிங்கன் வழங்கினார்.
அடுத்த ஒரு சில நாட்களில் 78 வயதை பூர்த்தி செய்யப்போகின்ற கவிஞர் துரைசிங்கம் , 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டியில், "நான் பல விருதுகளைப் பெற்றிருந் தாலும் பாரதியின் பெயரால் வழங்கப்படும் இவ்விருதை எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்த கலை இலைக்கிய ஊடகப் பெருமன்றம் ஒரு சிறிய கையேடு ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில் கவிஞர் துரைசிங் கத்தைப் பற்றிய ஓர் ஆய்வை அந்தனி ஜீவா எழுதியுள் ளார். மேலும் தமிழ் இலக்கி யவாதிகளிடையே நன்கு மதிக்கப் படும் மறைந்த க.கைலாசபதியின் 'பாரதியின் புரட்சி' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையும் உள்ளது.
அக்கட்டுரையில் கைலாசபதி “தமிழ் இலக்கியத்திலே புரட்சி என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய சுப்பிரமணிய பாரதியார், தாமே இலக்கியப் புரட்சியையும் செய்தவர் என்பதை வாதிட்டு நிறுவ வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.