கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
அமெரிக்காவில் தீவிரமாக கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதிபர் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களின் தனிமைப்படுத்தும் பணியைத் தொடங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டே ட்ரம்ப், தனது அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், அவரது மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் அளித்த ஆலோசனையின் பேரில் ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட விடியோ ஒன்றில் ‘‘நான் தற்போது வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.