உலகம்

நைஜீரியாவில் பள்ளிகள் திறப்பு

செய்திப்பிரிவு

நைஜீரியாவில் பள்ளிகள் அக்டோபர் 12 -ம் முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நைஜீரியாவின் கல்வி துறை அமைச்சகம் தரப்பில், “ நைஜீரியாவில் மாநில அரசுகளால் நடத்தப்படும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.

நைஜீரியாவி 59,001 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,452 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியா அறியப்பட்டது. கரோனா தடுப்பு மருந்து பரவலாக உலகம் முழுவதும் கிடைக்கும் வரை கரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT