டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தடை உத்தரவை அமெரிக்கநீதிபதி ஒருவர் ஒத்தி வைத்து ட்ரம்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
எனவே நவம்பரில் தேர்தல் முடிந்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. யுஎஸ் மவாட்ட நீதிபை கார்ல் நிகோல்ஸ், டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தைஏற்றார். அதாவது ட்ரம்பின் தடை உத்தரவு முதல் சட்டத்திருத்த உரிமைகளை மீறுவதாகவும் வர்த்தகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதாகவும் வாதிட்டனர்.
முன்னதாக இந்தியாவை அடுத்து சீனாவின் டிக்டாக் சமூக ஊடக செயலி தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிபது என்று அதனை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என்றார்.
டிக்டாக் செயலியை வைத்திருக்கும் சீன பைட்டான்ஸ் நிறுவனம் ஆரக்கிள் நிறுவனம் வாங்குவதற்காக ஒரு லேசான உடன்படிக்கை ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்படுவதற்கான நடவடிக்கையை டிக்டாக் மேற்கொண்டது.
நீதிபதி நிகோல்ஸிடம் டிக்ட்ஆக் வழக்கறிஞர் ஜான் ஹால், ‘டிக் டாக் செயலியையும் தாண்டியது. இது டவுன் ஸ்கொயர் என்பதன் ஒருநவீனகால வடிவம். நள்ளிரவில் தடை வந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். டவுன் ஸ்கொயரை கயிறு கட்டி யாரையும் நுழைய விடாது செய்தல் போலத்தான் டிக்டாக் செயலியைத் தடை செய்வதும்.’ என்றார்.
இதன் மூலம் உள்ளடக்க உருவாக்குனர்கள், அதன் ஆயிரக்கணக்கான எதிர்கால பார்வையாளர்கள் ஆகியோரைப் பாதிக்கும், மேலும் புதிய திறமைகளையும் நாங்கள் கொண்டு வர முடியாது. மேலும் ஏற்கெனவே பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அனுப்ப முடியாமல் போகும் என வாதிட்டார்.
சீன நிறுவனம் மேலும் வாதிடுகையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி செயலியை முடக்க அதிபர் ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என்றும் இது டிக் டாக்கின் பேச்சுரிமைகளுக்கான முதல் திருத்தத்தை மீறுவதாகும் என்றும் வாதிட்டனர். தேசிய அவசரநிலை போன்று ஏதாவது இருந்தால் தடையை ஒப்புக் கொள்ளலாம் இல்லையேனில் தடை செய்ய சட்டத்தில் இடமில்லை என்று வாதிட்டனர்.