உலகம்

முல்லா ஒமருக்கு தஞ்சமளித்த பாக்.- ஹிலாரிக்கு வந்த இ-மெயிலில் பரபரப்பு தகவல்

பிடிஐ

"முல்லா ஒமருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு அடைக்கலம் அளித்தது நமக்கு நன்றாகவே தெரியும்' எனக் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் ஹிலாரி கிளின்டனுக்கு பெயர் அடையாளம் இல்லாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த ஆப்கான் போரில் தோற்கடிக்கப்பட்ட தாலிபான் தலைவர் முல்லா ஒமர் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் முல்லா ஒமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, முல்லா ஒமர் குறித்து தகவல் எதுவும் தெரியாது என்று பாகிஸ்தான் பலமுறை திட்டவட்டமாக தெரிவித்ததும் அதேபோல, முல்லா ஒமர் பாகிஸ்தானில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று அமெரிக்காவும் கூறி வந்த நிலையில் ஹிலாரி கிளின்டனின் பழைய மின்னஞ்சல் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலாரி கிளின்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தனது பொறுப்பு தொடர்பான மின்னஞ்சல் சேவைகளுக்கு தனது சொந்த சர்வரை பயன்படுத்தியாதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது மின்னஞ்சல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன. அப்படி வெளியான 125 மின்னஞ்சல்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT