உலகம்

வானியல் நிகழ்வில் அபூர்வம்: 33 ஆண்டுக்குப் பிறகு தோன்றிய ரத்தநிலா

செய்திப்பிரிவு

வானியல் நிகழ்வுகளில் அபூர்வ மான ‘ரத்த நிலா’ நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது.

நேற்று முழுநிலவு நாள். பூமிக்கு மிக அருகில் நிலா வந்த தால், வழக்கத்தை விட 14 சதவீதம் மிகப்பெரிய நிலாவாகக் காட்சிய ளித்தது. இதன் ஒளியும் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாக இருந்தது. இதுபோன்று பெரிய நிலாவாகத் தோன்றுவதை சூப்பர் மூன் என அழைப்பர்.

சந்திர கிரகணம் என்பது சூரிய னுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது.இதனால் சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்துவிடுகிறது. பூமியின் நிழல்தான் நிலவில் படுகிறது. முழு நிலவன்று மட்டுமே சந்திரகிரகணம் ஏற்படும்.

சந்திர கிரகணத்தன்று சூப்பர் மூன் வருவதால் நிலா, பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் பூமியின் வளி மண்டலத்தில் பட்டுச் சிதறும் சூரிய ஒளியில் சிவப்பு நிற அலைவரிசை மட்டும் நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அப்போது நிலா இளஞ்சிவப்பு முதல் ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் காட்சியளிக்கும்.

இந்த வானியல் நிகழ்வை ரத்த நிலா என அழைக்கின்றனர். இதுபோன்று, பூமிக்கு மிக அருகில் முழுநிலவு தோன்றும்போது சந்திர கிரகணம் ஏற்படுவது அபூர்வ நிகழ்வாகும். கடந்த 1982-ம் ஆண்டு இதுபோன்று சூப்பர் மூன் தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. நேற்று ரத்த நிலா உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசிய பகுதிகளில் இந்த ரத்த நிலா தெரிந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.40 மணிக்கு ரத்த நிலா தெரிந்தது.

வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, வானியல் ஆய்வாளர் களும் ரத்த சிவப்பு நிலாவில் மிக்க ஆர்வம் காட்டினர். சந்திர கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நிலவில் ஏற்பட்ட தட்பவெட்ப மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த ரத்தசிவப்பு நிலா வரும் 2033-ம் ஆண்டு நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களில் மோர் மோன் தேவாலய மரபைப் பின்பற்று பவர்கள் ரத்த நிலா தோன்றினால் உலகம் அழிந்து விடும் என நம்புகின்றனர். இதனால், அவர் களின் மத நம்பிக்கை குறித்தும் நேற்று பெரிய எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT