பாகிஸ்தானுக்கும், ராணுவத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, “பாகிஸ்தான் ராணுவம் ஜனநாயகத்தையும், பாகிஸ்தான் நிர்வாகத்தையும் ஆதரிக்கிறது. பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையில் நல்ல உறவு நீடிக்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா உலக நாடுகளிடையே பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்று இம்ரான்கான் தெரிவித்தார்.
கரோனா வைரஸ்
பாகிஸ்தானில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கு 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் தற்போது கரோனா கட்டுக்குள் இருப்பதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.