உலகம்

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் இந்தியாவுக்காக சிறப்புப் பிரிவு தொடக்கம்

பிடிஐ

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இந்தியாவுக்காக சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆஸ்டன் கார்டர் கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றார். இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு அவர் முன்னுரிமை அளித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பென்டகனில் இந்தியாவுக்காக சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கெய்த் வெப்ஸ்டர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இப்பிரிவில் பணியாற்ற உள்ளனர்.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைந்து அதிநவீன ஆயுதங்களை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. வெளிநாடு ஒன்றுக்காக பென்டகனில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

SCROLL FOR NEXT