செவ்வாய் கிரகத்துக்கு தங்கள் பெயர்களை அனுப்ப விரும்பும் விண்வெளி ஆர்வலர்களுக்கு ‘நாசா’ அழைப்பு விடுத்திருந்தது.
செவ்வாய் கிரகத்துக்கு வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் விண் கலம் அனுப்ப நாசா முடிவு செய்துள் ளது. செவ்வாயின் மேற்பரப்பில் ‘ரோபோ’ மூலம் ஆய்வு மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாயில் தரை யிறங்கும் விண்கலத்தின் கம்ப் யூட்டர் ‘சிப்’களில் பதிக்கும் வகையில் விண்வெளி ஆர் வலர்கள் தங்கள் பெயர்களை அனுப்பலாம் என நாசா அழைப்பு விடுத்திருந்தது. இதன் கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது.
2016, மார்ச் 4-ம் தேதி கலிபோர்னியா மாநிலத்தின் வேன்டன்பெர்க் விமானப் படை தளத்தில் இருந்து அட்லஸ் வி 401 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்படும். 2016, செப்டம்பர் 20-ம் தேதி இந்த விண்கலம் செவ் வாயில் தரையிறங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.