உலகம்

24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு

செய்திப்பிரிவு

‘‘சிரியா அகதிகள் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஐரோப்பிய யூனியன் திட்டத்தின்படி 24 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொள்வோம்’’ என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஹோலந்த் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதி களின் தாக்குதலுக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப் பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். சட்டவிரோதமாக பல நாடுகளுக்குள் நுழை வதற்காக கடல் வழி பயணம் மேற் கொள்கின்றனர். அப்படி கடலில் செல்லும்போது, படகுகள் கவிழ்ந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அயலான் என்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந் தான். அவனது சடலம் துருக்கி கடற்கரையோரம் ஒதுங்கியது.

அந்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது. இதையடுத்து பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிரியாவில் இருந்து வருபவர்களை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் ஹோலந்த் கூறுகையில், ‘‘அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஐரோப்பிய யூனியன் திட்டத்தின்படி 24 ஆயிரம் பேரை பிரான்ஸ் ஏற்றுக் கொள்ளும். மேலும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் தொடங்கும். சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம்’’ என்று நேற்று அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘‘சிரியாவில் இருந்து வரும் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க திட்டம் வகுத்து வருகிறோம்’’ என்று கூறியிருந்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஹோலந்த் இந்த தகவலை வெளி யிட்டுள்ளார்.

ஹோலந்த் மேலும் கூறுகை யில், ‘‘நானும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் சிரியா அகதி கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி னோம். சிரியாவில் இருந்து வரும் அகதிகளை ஐரோப்பிய யூனி யனை சேர்ந்த நாடுகள் சேர்த்து கொள்ள நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று கூறுகை யில், ‘‘சிரியாவில் இருந்து வந்து கொண்டிருக்கும் அகதிகளுக்கு பல நாடுகளிலும் தஞ்சம் அளிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. 10 ஆயிரம் அகதிகளை ஜெர்மனி சேர்த்துக் கொள்ளும்’’ என்றார்.

தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பல நாடுகளின் எல்லையில் உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். அவர்களை சட்டப்பூர்வ மாக சேர்த்துக் கொள்ளும் அறிவிப்பை ஐரோப்பிய நாடுகள் நாளை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சிரியா அகதி களை பங்கிட்டு கொள்ளும் திட் டத்தை ஹங்கேரி பிரதமர் விக்டர் நிராகரித்துவிட்டார்.

SCROLL FOR NEXT