உலகம்

இணையத்தில் ஊடுருவி தகவல்கள் திருட்டு: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுக எச்சரிக்கை

பிடிஐ

இணையம் மூலம் நடத்தப்படும் தாக்குதலை தேச பாதுகாப்பு மீதான தாக்குதலாகவே கருதுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சீனாவை மறைமுகமாக எச்சரிக் கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஒபாமா இவ்வாறு எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில், மர்ம நபர்கள் ஊடுருவி ஊழியர்களின் ரகசிய விவரங்களைத் திருடியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் சீன ராணுவத்துக்காக செயல்படும் இணையதள ஊடுருவல்காரர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இது தவிர அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்புகளின் கம்யூட்டர்களில் சீனா கைவரிசையை காட்ட முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் போர்ட் மெட்டில் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒபாமா பேசியது: சீனாவில் இருந்து இணைய வழி தாக்குதல் நடத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை ஒட்டுமொத்தமாக தேசத் தின் பாதுகாப்பு மீது நடைபெறும் தாக்குதலாக அமெரிக்கா கருது கிறது. இணைய வழி ஊடுருவலை யும், தாக்குதலையும் ஒரு போட்டி யாக எடுத்துக் கொண்டு செயல்பட் டால் அதில் நீங்கள் (சீனா) வெற்றி பெற முடியும். ஆனால் அதனால் யாருக்கும் பயன் இருக்காது. எனவே அதனை கைவிட்டு விட்டு சில அடிப்படையான விதிகளை வகுத்துக் கொண்டு நாம் எவ்வாறு செயல்படுவது என்று முயற்சித்தால் பலன் கிடைக்கும்.

தீவிரவாத தாக்குதல் உட்பட பல மோசமான பிரச்சினைகளை உலகம் எதிர்கொண்டுள்ளது. எனினும் சில குறிப்பிட்ட நாடுகளின் உதவியுடன் சிலர் இணையம் மூலம் ஊடுருவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதுகிறேன்.

ஆப்கானிஸ்தானில் அல் காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் நடத்திய போர் சிறப்பானது. அதன் மூலம் அப்பகுதியை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்தோம். அந்த தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எனினும் அந்த இயக்கம் இப்போதும் அச்சுறுத்தலாக உள்ளது.

இப்போது சிரியா, இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள் ளனர். அவர்கள் பல்வேறு பகுதிக்கு தீவிரவாதத்தை பரப்பி வருகின்ற னர். அவர்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT